உடலில் ஊடுருவி நோயின் தன்மை சொல்லும் புதிய கமரா கண்டுபிடிப்பு!
6 புரட்டாசி 2017 புதன் 08:33 | பார்வைகள் : 14987
உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு இதை கண்டுபிடித்துள்ளது.
தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது.
ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது’ என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan