டுவிட்டரில் புதிய வசதி!
18 மாசி 2018 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 12712
பேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற்றுமொரு சமூக வலைத்தளமாக டுவிட்டர் விளங்குகின்றது.
இதில் ஏற்கணவே நேரடி வீடியோக்களை ஒளிபரப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் உள்ளூர் செய்திகளையும் நேரடி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அவசர செய்திகளின்போது உள்ளூர் சேனல்களின் செய்திகளை நேரடி ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மியாமி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான செய்திகளை WSVN 7 சேனல் ஒளிபரப்பியது.
இதனை டுவிட்டர் தளமும் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan