பேஸ்புக்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

29 புரட்டாசி 2019 ஞாயிறு 12:37 | பார்வைகள் : 12849
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து சில வசதிகள் மறைக்கப்படவுள்ளன.
இதன்படி ஒருவருடைய போஸ்ட்டிற்கான லைக்குகளின் எண்ணிக்கை, ரியாக்ஷன்கள் மற்றும் வீடியோக்களுக்கான பார்வையின் எண்ணிக்கை என்பவற்றினை மற்றையவர்கள் பார்க்க முடியாது.
எனினும் இவ் வசதி மறைப்புக்கள் அவுஸ்திரேலிய பயனர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் இன்றைய தினம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த தகவலை அவுஸ்திரேலியாவிற்கான பேஸ்புக்கின் இயக்குனர் Mia Garlick வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டாகிராமிலும் இவ்வாறான வசதி மறைப்புக்கள் கடந்த ஜுலை மாதம் முதல் சோதனை முயற்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025