Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

31 ஐப்பசி 2019 வியாழன் 08:47 | பார்வைகள் : 12913


பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

 
பல மில்லியன் கணக்கான பயளர்களைக் கொண்டுள்ள இந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கணக்கினை ஒரே நேரத்தில் ஒரு மொபைலில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.
 
எனினும் ஒரு கணக்கினை ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் மிகவும் சிறந்தது என பயனர்கள் கருதி வந்தனர்.
 
தற்போது இவர்களில் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் குறித்த வசதியை வழங்குவது தொடர்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தவிர iOS சாதனங்களுக்காக Hide Muted Status Update, Splash Screen மற்றும் App Badge Improvement போன்றவற்றின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் ஒன்றினையும் உருவாக்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்