Paristamil Navigation Paristamil advert login

Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

11 மார்கழி 2019 புதன் 11:07 | பார்வைகள் : 13498


கடந்த ஒரு மாதகாலத்தில் சில புதிய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த வரிசையில் ஞாபகமூட்டல்களை (Reminers) மேற்கொள்ளக்கூடிய வசதியும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இவ் வசதியை பெறுவதற்கு பிறிதொரு அப்பிளிக்கேஷனையும் நிறுவ வேண்டும்.
 
Any.do எனும் மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷனே குறித்த வசதியினை வாட்ஸ் ஆப்பில் தருகின்றது.
 
இதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் Any.do இணைந்துள்ளது.
 
சாதாரண Reminder அப்பிளிக்கேஷன்களைப் போன்றே இதிலும் பல்வேறு வசதிகளைப் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்