Paristamil Navigation Paristamil advert login

சதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung!

சதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung!

16 மாசி 2020 ஞாயிறு 12:41 | பார்வைகள் : 13603


Samsung நிறுவனம் சதுர வடிவில் மடக்கக்கூடிய திறன்பேசியை வெளியிடவுள்ளது. புதிய Galaxy Z Flip திறன்பேசி Apple நிறுவனத்தின் திறன்பேசிகளுக்குச் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
சுமார் 2000 டாலருக்கு விற்கப்பட்ட Galaxy Fold திறன்பேசியின் விலையை விட புதிய ரக திறன்பேசியின் விலை மலிவாக இருக்கும்.
 
Galaxy Fold எதிர்நோக்கிய தொழில்நுட்பக் கோளாறுகள் போல புதிய திறன்பேசியும் இடையூறுகளைச் சந்திக்குமா என்று வாடிக்கையாளர்களின் மனத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
மடக்கக்கூடிய திறன்பேசிகளைத் தயாரிப்பது கடினம் என்றும் அவற்றைத் தயாரிக்கும் செலவு அதிகம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
அதனால், நிறுவனம் புது ரகக் கைத்தொலைபேசிகளில் கவனம் செலுத்துகிறது என்று கூறப்படுகிறது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்