Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்!

கொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்!

15 பங்குனி 2020 ஞாயிறு 10:20 | பார்வைகள் : 14574


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொடூர வைரஸின் தாக்குதலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 
அந்த வகையில் சீனாவும் பல்வேறு வழிகளில் பல முன்னெடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. தொழில்நுட்பங்களில் அவர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த நவீன வகை ரோபோக்கள் போன்றவற்றை வைத்து அங்கிருப்பவர்களும் அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவில்  அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு வழிமுறைகளில் பாதிப்புகளை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் சீனர்கள் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அதிநவீன ரோபோக்களையும், மற்றும் புதிதாக உருவாக்கிய ரோபோக்களையும் வைத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலமும், இருமவது, தும்முவது போன்ற செயல்களின் மூலம் தான் மற்றவர்களை கொரோனா வேகமாக தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
இது போன்ற செயல்கள் மூலம் நோய் பரவுவதை தடுக்க தாங்கள் உருவாக்கிய ரோபோக்களை கொண்டு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும், வீடுகளில் அடங்கி கிடப்பவர்களுக்கு மற்றும் ஹோட்டல் விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு உதவிகளையும் உணவுகளையும் வழங்க நவீன ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இதனையடுத்து சீனாவில் இருக்கும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கி வைத்திருந்த தானியங்கி ரோபோக்கள் இன்று கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
சீனாவின் ஹோட்டல்களில் சமைத்த உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காகவும், தாங்கள் கழுவி வைத்திருக்கும் பாத்திரங்களை எடுத்து செல்வதற்கும்  உருவாக்கிய ரோபோக்களை, சீனாவின் ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்துகின்றனர்.
 
 மேலும் இந்த வகை ரோபோக்களை உருவாக்கி வரும் ”புடு டெக்னாலஜிஸ்” (PUDU TECHNOLOGIES) நிறுவனம் அவர்கள் தயாரித்து வரும் ரோபோக்களை சீனாவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கியது.
 
அந்த ரோபோக்களை கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும்அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவவுவதற்காக அந்த ரோபோக்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
 
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நேரடியான தொடர்பு எற்படாமல் நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேபோல திருடர்களை கண்காணிப்பதற்காக சீன போலிசார் பயன்படுத்தும் ட்ரோன் எனப்படும் சிறியரக பறக்கும் விமானங்களை கொண்டு தேவையில்லாமல் மனிதர்கள் வெளியில் நடாமாடுவதையும், முகமூடி அணியாமல் இருப்பவர்களை கண்காணிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
 
மக்களுக்கு கொரோனா தீவிரம் பற்றி கூறி வெளியில் இருப்பவர்களை வீட்டிற்கு செல்ல உத்தரவிடுகின்றன பேசும் ட்ரோன்கள். மேலும் நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு ரத்த மாதிரிகளை பரிசோதிக்கவும், ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.
 
சமீபத்தில் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களை பரிசோதிக்கவும் செயற்கை கையை தயாரித்திருந்தனர், மேலும் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதற்கும் ரோபோக்களை உபயோகித்து வருகின்றனர் சீன மருத்துவர்கள்.
 
இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்சியின் மூலம் தாங்கள் கண்டுபிடித்து வைத்திருந்த இயந்திரங்களை கொண்டு மக்களை காப்பாற்ற பல வகையிலும் முயற்சித்து வரும் சீனாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்