Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இந்துஸ்தான் பல்கலைகழகத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட செவிலி

இந்துஸ்தான் பல்கலைகழகத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட செவிலி

14 வைகாசி 2020 வியாழன் 15:17 | பார்வைகள் : 12495


கரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெருகி பரவி பெரும் அவசர அபாய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை எடுத்து வரும் தடுப்பு மற்றும் கட்டுபடுத்தும் செயல் பணிக்கு உதவும் வகையில் நேரடி மருத்துவ பணியாளர்களை நோய் தொற்றிலருந்து காத்திடும் நோக்கில், செவிலி ரோபோட் இந்துஸ்தான் (HITS) பல்கலைகழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (Centre for Automation and Robotics-ANRO) வடிவமைத்து உருவாக்கி உள்ளது. நோயாளிகளுக்கு நேரடி உதவி, கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பணிகளை மேற்கொள்வதால் 'செவிலி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு ரோபோட் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், மேலும் 4 ரோபோட்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த முயற்சிக்கு ரெனால்ட் நிஸ்ஸான் துணை நின்றது

கரோனாவுக்கு எதிரான போரில் எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும், துணை மருத்துவ பணியாளர்களும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.இந்த சவாலான மனிதநேய பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் எளிதில் நோய் தொற்றும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். நோயாளிகளுடன் மருத்துவ பணியாளர்கள் நேரடியாக தொடர்புக்கொள்வதை தவிர்க்க முடியாதெனினும், குறைப்பதன் மூலம்  நோய் தொற்றும் வாய்ப்பை மட்டுபடுத்த முடியும்.

மருத்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிட, நேரடியாக தொடர்புக்கொண்டு உதவுவதற்கு பதிலாக 'செவிலி' சேவை ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும். செவிலி ரோபோக்கள் தனிமை வார்டுக்கு சென்று உணவு, மருந்துகள் இதர தேவையான பொருள்களை வழங்கிடும். நோயாளிகளுடன் மருத்துவ பணியாளர்கள் தொலைவிலிருந்தே செவிலி ரோபோவில் உள்ள காணொளி திரையின் வழியே உரையாடவும், அறியுரை கூறவும் வழிகாட்டவும் இயலும்.

பேராசிரியர். தினகரன் தலைமையிலான குழுவினர்  பேரா.ரம்யா & மைய (ANRO) பேராசிரியர்கள், ஆராய்ச்சி இணையர்கள் திரு.கார்திக் குமார், ஜெய்ஸ், ராஜேஷ், இளங்கவி, தொழில்நுட்ப அலுவலர்கள்   வினாயக மூர்த்தி & திரு. ராஜசேகர், இளங்கலை மெகாரானிக்ஸ் மாணவர்கள் லேனா சேகர், ஆகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் இந்த ரோபோட்டை உருவாக்கி உள்ளனர்

செவிலி ரோபோவின் எளிமையான வடிவமைப்பும் அலகு கட்டமைப்பும் கொண்டிருப்பதால் அதிக அளவில் குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் என்று திட்ட மற்றும் மைய தலைவர் பேராசிரியர். தினகரன் தெரிவித்தார்

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்த காட்டிய ஆர்வத்திற்கும் டாக்டர்  ஜெயந்தி,டீன் ,ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனை அவர்களின் ஆலோசனைகளும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த முயற்சியில் துணை நிற்கும் ரெனால்ட் நிஸ்ஸான் க்கும் உற்பத்தியில் உதவிய ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேஷன் க்கும் நன்றி தெரிவித்தார் 

இந்த திட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் ஊக்கத்தயும்  வழங்கிய இந்துஸ்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் குறிப்பாக இணை வேந்தர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், இயக்குநர் திரு அசோக் வர்கீஸ், துணை வேந்தர் டாக்டர் கே பி ஐசக் ஆகியோரின் ஒத்துழைப்புக்கும் ஊக்கத்திற்கும் பேராசிரியர் தினகரன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்

மேலும் இந்த கோவிட்-19 க்கு எதிரான போரில் அரசுடன் இணைந்து  இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பணியாற்றுவதில் பங்கெடுப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்