Paristamil Navigation Paristamil advert login

Zoom அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் புதிய வசதி!

Zoom அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் புதிய வசதி!

13 ஆனி 2020 சனி 12:48 | பார்வைகள் : 10926


தற்போதைய சூழ்நிலையில் நிறுவனங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு அப்பிளிக்கேஷனாக Zoom காணப்படுகின்றது.

 
எனினும் இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதன் காரணமாக பலர் பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர்.
 
இதனைக் கருத்திற்கொண்டு Zoom நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
 
இந்த வரிசையில் தற்போது பயனர்களை தடை செய்யும் வசதியினை (Block) அறிமுகம் செய்யவுள்ளது.
 
குறிப்பாக நாடுகளின் அடிப்படையில் பயனர்களை தடைசெய்யக்கூடிய வசதியினை வழங்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இதனை அடுத்து குறித்த வசதியினை அறிமுகம் செய்வதற்கு Zoom நிறுவனம் தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்