Paristamil Navigation Paristamil advert login

இதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்!

இதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்!

13 தை 2019 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 12047


உலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
 
இக் கணினியில் இதுவரை இல்லாது புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
அதாவது உறங்கு நிலையில் குறித்த லேப்டொப் இருக்கும்வேளையில் அதனை பயன்படுத்துவதற்கு எவராவது நெருங்கும்போது தானாகவே செயற்பட ஆரம்பிக்கும்.
 
இதன்போது ஹலோ எனும் வார்த்தையுடன் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யுமாறு கேட்கும்.
 
இதற்காக விசேட சென்சார் ஒன்று இந்த லேப்டொப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
 
14 அங்குல திரையினைக் கொண்டுள்ள இந்த லேப்டொப்பின் எடையானது 1.36 கிலோ கிராம்கள் ஆகும்.
 
பிரதான நினைவகமாக 16GB LPDDR3 SDRAM, 256GB SSD சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.
 
இதன் விலையானது 1,600 அமெரிக்க டொலர்கள ஆக காணப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்