உலகின் மிகச் சிறிய கமரா கண்டுபிடிப்பு

23 மாசி 2019 சனி 12:16 | பார்வைகள் : 10862
உலகின் மிகச்சிறிய கமரா மோகாகேம் நிறுவனம் கண்டுப்பிடித்துள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கமரா லென்ஸ் உள்ளது.
வீடியோ காட்சிகளை 4 கே 25 எப்.பி.எஸ்.வேகத்தில் பதிவு செய்யும் முடியும்.
4.5 சென்றி மீற்றர் நீளம்,அகலம் கொண்டுள்ளதோடு இதன் விலை சுமார் 14,129 ஆயிரம் ரூபாவாகும்.
நீர் உட்புகா தன்மை கொண்டுள்ள இக் கமரா 60 மீற்றர் ஆழம் வரை சென்றாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் கமரா270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது.
எனினும் குறித்த கமராவை 4 மணி நேரம் தொடர்ந்து காணொளி காட்சிகளை எடுக்க முடியமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.