Facebook வழங்கியுள்ள உத்தரவாதம்!

17 பங்குனி 2019 ஞாயிறு 14:11 | பார்வைகள் : 12181
உலகெங்கிலும் இரண்டு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இவ்வலைத்தளமானது கடந்த இரண்டு வருடங்களாக பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் ஆட்டம் கண்டு வருகின்றது.
அத்துடன் போலியான தகவல்கள் பரிமாறப்படுவதை தடுக்கவும் முடியாமல் திண்டாடி வருகின்றது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவுனரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.
எனவே தனிநபர் தகவல்களை பாதுகாப்பது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் வழங்கிய உத்தரவாதத்தினால் பயனர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
எனினும் இதன் சாத்தியத்தன்மை தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.