WhatsApp குழுவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

28 சித்திரை 2019 ஞாயிறு 13:59 | பார்வைகள் : 12310
மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.
இதில் குழுக்களை உருவாக்க முடிவதுடன் அக் குழுவில் விரும்பிய நபர்களை சேர்க்கும் வசதியும் காணப்படுகின்றது.
எனினும் சில குழுக்களில் மேற்கொள்ளப்படுகின்றன அநாவசியமான தகவல் பரிமாற்றம் காரணமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
எனவே குழுக்களில் விரும்பியவாறு எம்மை மற்றவர்கள் இணைப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்கான வசதியும் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ளது.
இதனை செயற்படுத்துவதற்கு, முதலில் வாட்ஸ் ஆப் செயலியை திறக்கவும்.
அதிலுள்ள Settings பகுதிக்கு சென்று Accounts பகுதியிலுள்ள Privacy என்பதை தெரிவு செய்யவும்.
அங்கு Groups என்பதில் Everyone, My Contacts மற்றும் Nobody என்பன தென்படும்.
இவற்றில் Nobody என்பதை தெரிவு செய்தால் எவரும் உங்களை குழுக்களில் இணைக்க முடியாது.
My Contacts என்பதை தெரிவு செய்தால் உங்கள் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள இலக்கத்தில் வாட்ஸ் ஆப் வைத்திருப்பவர்கள் மாத்திரம் உங்களை குழுக்களில் இணைத்துக்கொள்ள முடியும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025