அனுமதியின்றிப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திய Twitter!

9 ஆவணி 2019 வெள்ளி 03:54 | பார்வைகள் : 10581
Twitter நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் அனுமதி இன்றி விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
அந்தக் குறைபாடுபற்றி அண்மையில் கண்டுபிடித்ததாகவும் அதனை நேற்று முன்தினம் சரிசெய்துவிட்டதாகவும் Twitter கூறியது.
இருப்பினும், அது யார் யாரையெல்லாம் பாதித்திருக்கலாம் என்பது உறுதிசெய்யப்படவில்லை என்று Twitter குறிப்பிட்டது.
பயனீட்டாளர்கள் வசிக்கும் நாட்டின் குறியீட்டு எண், அவர்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்புச் சாதனம் உள்பட சில தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அது தெரிவித்தது.