Telegramஇல் இணைந்த 70 மில்லியன் புதிய பயனீட்டாளர்கள்!

9 ஐப்பசி 2021 சனி 09:44 | பார்வைகள் : 13369
Facebookஇல் உலகளாவிய சேவைத்தடை நேர்ந்தபோது சுமார் 70 மில்லியன் புதிய பயனீட்டாளர்கள் Telegram செயலியில் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram சேவையின் நிறுவனர் திரு. பாவெல் டுரோவ் (Pavel Durov) அதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பல மில்லியன் பேர் ஒரே சமயத்தில் Telegramஇல் சேர்ந்ததால் சில பயனீட்டாளர்கள் சேவையில் தாமதத்தைச் சந்தித்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம் (அக்டோபர் 4) நேர்ந்த சேவைத்தடையால் சுமார் ஆறு மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் 3.5 பில்லியன் பேர் WhatsApp, Instagram, Facebook Messenger தளங்களைப் பயன்படுத்த முடியவில்லை.
ஒருசில பெரிய நிறுவனங்களை மட்டும் சார்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை அது உணர்த்துவதாகக் கூறப்பட்டது.
WhatsApp செயலியின் சேவை சுமார் 6 மணி நேரத்திற்குத் தடைப்பட்டதால் பங்குச்சந்தை முதல் ரஷ்ய எண்ணெய்ச் சந்தை வரை பல துறைகள் பாதிக்கப்பட்டன.
மற்ற தகவல் பரிமாற்றத் தளங்களுக்கு மாறியதால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் தவிர்க்கப்பட்டது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025