இணைய இணைப்பினைக் கொண்ட முகக் கவசம் உருவாக்கம்

1 ஆடி 2020 புதன் 18:25 | பார்வைகள் : 16254
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்றும் உலக அளவில் அடங்காத நிலையில் முகக் கவசங்களுக்கு கிராக்கி காணப்பட்டு வருகின்றது.
இதனைக் கருத்திற்கொண்ட முகக் கவசங்களில் சில புதுமைகள் புகுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் ஜப்பானை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இணையத் தொழில்நுட்பத்தில் உருவாக்கக்கூடிய முகக் கவசத்தினை உருவாக்கியுள்ளது.
இதற்கு C-Mask என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைக்கக்கூடியதாக இருப்பதுடன் குறுஞ்செய்திகளை பரிமாறக்கூடியதாகவும் இருக்கின்றது.
அதுமாத்திரமன்றி ஜப்பான் மொழியிலிருந்து சுமார் 8 ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்தல் மற்றும் அழைப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற வசதியும் இந்த முகக் கவசத்தில் தரப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 5,000 முகக் கவசங்களை குறித்த நிறுவனம் உருவாக்கியுள்ளதுடன் ஒன்றின் விலையானது 40 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025