ட்விட்டர் நிறுவனத்தின் புதிய CEO
13 வைகாசி 2023 சனி 08:52 | பார்வைகள் : 12192
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகும் பெண் ஒருவரை எலான் மஸ்க் நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துவந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அத்துடன், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்திருப்பதாகவும் 6 வாரங்களில் அவர் தனது பணியை தொடங்குவார் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல ஊடக நிறுவனமான NBC Universal-ன் முன்னாள் விளம்பர தலைவராக இருந்த லிண்டா யக்காரினோவை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரம், வணிக செயல்பாடுகளில் லிண்டா கவனம் செலுத்துவார் என தெரிவித்த மஸ்க், நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்து வேன் என்றும் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan