முன்னாள் கூகிள் CEO வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
5 ஆனி 2023 திங்கள் 12:11 | பார்வைகள் : 11707
உலகம் முழுவதும் AI எனப்படும் Artificial Intelligence ன் வளர்ச்சி அபாயங்கள் குறித்து கூகிள் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கூகிள் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் கூறுகையில்,
தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI டெக்னாலஜியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
Open AI வெளியிட்ட ChatGPT மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள BARD என நாளுக்கு நாள் புதுப்புது AI தொழில்நுட்பங்கள் மக்களிடையே பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.
கோப்புகள், ஆவணங்கள் எழுதுவது தொடங்கி, புகைப்படம் எடிட் செய்தல்,
வீடியோ உருவாக்குதல் என அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம் என்கிறார் கூகிள் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட்.
சமீபத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர்,
இந்த AI தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதே அளவு ஆபத்தையும் உருவாக்குவதாகவும், AI தொழில்நுட்பம் குறித்த அறிவு பயங்கரவாத அமைப்புகளால் கைகொள்ளப்படும் பட்சத்தில் இது மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறும் எனவும் கவலை வெளியிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan