வாட்ஸ் அப்பில் நம்பரை சேமிக்காமல் Message அனுப்பலாம்!
.webp)
22 ஆனி 2023 வியாழன் 13:22 | பார்வைகள் : 9234
ஒருவரின் நம்பரை சேமிக்காமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பது குறித்த சில வழிமுறைகள் உள்ளன.
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை ஒருவரின் நம்பரை போனில் சேமித்தால் தான் அவருக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.
இது பலருக்கு சில சமயங்களில் சிக்கலாகவே உள்ளது. அதனை தீர்க்க உள்ள வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம்.
எளிய வழிமுறைகள்
நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு Browser-யை Open செய்ய வேண்டும் (உதாரணம்: Google).
அதன் பின்னர் wa.me/91XXXXXXXXXX (நீங்கள் அனுப்ப வேண்டிய நம்பர்) என்று நீங்கள் message செய்ய வேண்டிய எண்ணை type செய்ய வேண்டும்.
பிறகு நீங்கள் நுழைந்தவுடன் ஒரு வலைப்பக்கம் திறக்கும். இங்கு 'Continue to Chat' எனும் Optionக்கு செல்ல வேண்டும்.
நீங்கள் 'Open with app' என்பதை தேர்வு செய்தால், நீங்கள் அவரின் நம்பரை சேமிக்காமலேயே அவருடன் Chat செய்ய முடியும்.
இதன்மூலம் நீங்கள் அவருடைய எண்ணிற்கு எளிதில் தகவல்களை பரிமாற முடியும்.
இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்க ஒருவரின் நம்பரை சேமிக்காமலேயே அவர்களுக்கு செய்தி அனுப்பலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025