மனித உடலோடு இணைக்கப்பட்ட டாக்டர்: ஆரோக்கியத்தை கணக்கிடும் ஸ்மார்ட் வாட்ச்-களின் சிறப்பம்சங்கள்
30 ஆனி 2023 வெள்ளி 02:24 | பார்வைகள் : 12944
நவீன உலகில் நமது உடலில் பொருத்தப்பட்ட டாக்டராக ஸ்மார்ட் வாட்ச்-கள் செயல்படுகின்றன, இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்-களின் முக்கிய அம்சங்கள் என்னவென்பதை இந்த கட்டுரை மூலம் பார்க்கலாம்.
உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகள் நமது அன்றாட பணிகளை எளிதாக்கும் பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் நமது உடலின் சீரான இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, தேவையான உடற்பயிற்சி போன்றவற்றை நமக்கு சுட்டிக் காட்ட ஸ்மார்ட் வாட்ச்கள் பெரிதும் உதவுகின்றன.
அத்துடன் இந்த ஸ்மார்ட் வாட்ச்-களில் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் குருஞ்செய்தி வசதி என பல்வேறு சிறப்பு வசதிகளும் உள்ளடக்கி காணப்படுகிறது.
இதயத்துடிப்பு கண்காணிப்பு
இந்த ஸ்மார்ட் வாட்ச்-களில் மிக முக்கிய சிறப்பம்சமாக இதயத்துடிப்பு கண்காணிப்பு பார்க்கப்படுகிறது, பொதுவாக சாதாரண மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 என்ற அளவில் இருக்க வேண்டும், இந்த அளவானது நமது உடலில் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ இந்த ஸ்மார்ட் வாட்ச் நமக்கான எச்சரிக்கையை வழங்கி விடும்.
அவசர அழைப்பு
இந்த ஸ்மார்ட் வாட்ச்-கள் எப்போது நம்முடைய ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும், ஆனால் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படாமல் தனித்து இயங்க கூடிய ஸ்மார்ட் வாட்ச்-களும் சந்தையில் விற்பனையில் உள்ளது.
இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்-கள் மூலம் அவசர உதவிக்கு ஸ்மார்ட்போன்களை தேடி கொண்டு இருக்க வேண்டாம், உங்கள் ஸ்மார்ட் வாட்ச்-இல் உள்ள ஒரு பட்டனை அழுத்தி உடனடியாக அவசர அழைப்பை தொடர முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் தானியங்கி முறையில் செயல்பட்டு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தகவல்களை பதிவு செய்து அனுப்பி விடும்.
உடற்பயிற்சி நினைவூட்டல்
வேலை பளு அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலை போதிய நடைபயிற்சி, தண்ணீர் பருகுதல் மற்றும் எழுந்து நிற்றல் போன்றவற்றை மறந்தே விடுகிறோம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் சரியான நேரத்தில் தண்ணீர் பருகுதல், நடைபயிற்சி மேற்கொள்ள நினைவூட்டுவது போன்ற முக்கிய வேலைகளை இந்த ஸ்மார்ட் வாட்ச் சிறப்பாக செய்கிறது.
சீரான தூக்கம்
இந்த ஸ்மார்ட் வாட்ச் இரவில் நம்முடைய சீரான தூக்கம், உடலின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் சப்ளை ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan