Apple பயனாளர்களுக்கு அதிர்ச்சி
21 புரட்டாசி 2022 புதன் 09:30 | பார்வைகள் : 15779
Apple நிறுவனத்தின் App Store-இல் அக்டோபர் மாதம் தொடங்கி சில நாடுகளில் செயலிகளின் விலை அதிகரிக்கவுள்ளது.
ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா, வியட்நாம், யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவற்றிலும் அடுத்த மாதம் தொடங்கி நிறுவனத்தின் செயலிகள் விலையேற்றம் காண்பதாகச் சொல்லப்பட்டது.
தானாகப் புதுப்பித்துக்கொள்ளும் சந்தாக்களுக்கு விலையேற்றம் பொருந்தாது.
புதிய விலை அக்டோபர் 5ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று Apple நிறுவனம் அதன் வலைத்தளத்தில் கூறியது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் App Store-இல் செயலிகளின் விலையை நிறுவனம் அதிகரிப்பதற்கான குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை.
ஆனால் டாலருக்கு நிகரான பல நாடுகளின் நாணய மதிப்பு சரிவு கண்டு வருவது விலை ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உதாரணத்திற்குக் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத நிலையில் யூரோவின் மதிப்பு டாலருக்குக் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
அதன் காரணமாக ஐரோப்பாவில் Apple சாதனங்களின் விலை ஏற்றங்கண்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan