WhatsAppஇல் வரப்போகும் புதிய Update - மகிழ்ச்சியில் பாவனையாளர்கள்

27 புரட்டாசி 2022 செவ்வாய் 11:51 | பார்வைகள் : 10767
WhatsApp நிறுவனத்தின் அடுத்து வரும் புதிய அப்டேட் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதற்கமைய, 32 பேர் வரை ‘Group Call'(கூட்டு தொலைபேசி அழைப்பு) செய்யும் புதிய வசதியை அறிமுகபடுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கையில் மாத்திரம் WhatsApp செயலிக்கு 50 கோடி பாவனையாளர்கள் இருப்பதால், புதிய வசதியானது தெற்காசிய சந்தையில் போட்டியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது