Paristamil Navigation Paristamil advert login

மனிதர்களை போன்று சிரிக்கும் ரோபோ இயந்திரம் கண்டுபிடிப்பு!

மனிதர்களை போன்று சிரிக்கும் ரோபோ இயந்திரம் கண்டுபிடிப்பு!

3 ஐப்பசி 2022 திங்கள் 03:36 | பார்வைகள் : 8879


 ஜப்பானில் மனிதர்களைப் போல பல்வேறு வித்தியாசமான முறைகளில் சிரிக்கும் மனித இயந்திரமான ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
ஜப்பானை சேர்ந்த கியுஷு என்ற தகவல் அறிவியல் மற்றும் மின் பொறியியல் பல்கலைகழகத்தின் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை  கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த மனித இயந்திரத்திற்கு எரிக்கா என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த ரோபோ சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போலும், மனிதர்களுக்கு ஏற்றார் போலும் வித்தியாசமாக சிரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த ஆய்வு ரோபோக்களுக்கு மனிதநேயத்தை சேர்க்கும் ஒரு முக்கிய படி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
இருப்பினும், சிரிப்பு நகலெடுப்பது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரம் மற்றும் பெரிய அளவிலான ஆராய்ச்சி தேவை என்றும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகிறது. 
 
சிரிப்பு என்பது மொழியியல் அல்லாத நடத்தை என்றாலும், அது உரையாடல் மற்றும் கலாசாரத்தின் சூழலையும் சார்ந்துள்ளது. எனவே ஒரு நண்பருடன் பேசுவது போல் ஒரு ரோபோவுடன் அரட்டையடிக்க 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்