Paristamil Navigation Paristamil advert login

Whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

Whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

6 பங்குனி 2023 திங்கள் 09:44 | பார்வைகள் : 9132


இன்றைய சூழ்நிலையில் சிறுவர் முதல் பெரியோர் அனைவருமே இலகுவாக குறுஞ்செய்திகளை பறிமாற்றிக்கொள்ளும் ஒரு சமூக வலைத்தளம் வாட்ஸ்அப் ஆகும்.

உடனடி செய்தி பரிமாற்றம் மற்றும் வாய்ஸ் பரிமாற்றம் என வாட்ஸ்அப்பில் இருக்கும் சேவைகள் ஏராளம்,இந்த வாட்ஸ்அப்பிற்கு தறபோது புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது,வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனம்.  

குரூப் கால்களில் முன்பெல்லாம் 10 பேரளவிலேயே சேர்த்துகொள்ளலாம் தற்போது 30 பேருக்கும் மேல் சேர்த்துக்கொள்ளலாம்.

2 ஜிபிற்கும் மேற்பட்ட பைல்கள் டாக்குமெண்ட்களை அனுப்பிக்கொள்ளலாம்.தற்போது வாட்சப் புதிய அப்டேட் சிலவற்றை கொண்டுவந்துள்ளது. 

அதில் வாட்சப்பில் தற்போது குரூப்களில் இருந்து குறித்த நபர் வெளியேறும்போது முன்புபோல் அனைவருக்கும் Notification ஆகாது அட்மினிற்கு மட்டுமே நோடிபை ஆகும்.

உங்களது குறுஞ்செய்திகளை ஒருதடவை மாத்திரம் பார்க்குமாறு செய்ய முடியும் அத்தோடு முன்பு போல அதை ஸ்கிறீன்ஷோட் செய்ய முடியாது.உங்களுக்கு நெருக்கமான நபரோ அல்லது அடிக்கடி மெசேஜ் செய்யும் நபர் ஒருவரினதோ ஸ்டேட்டஸ் உங்களுக்கு அவரின் வாட்ஸப் கணக்கு புகைப்படத்தை சுற்றி வளைய வடிவில் காணக்கூடியதாக இருக்கும்.

வாட்ஸப்பில் யாருடைய ஸ்டேட்டஸாவது வாட்ஸ்சப்பின் அடிப்படை விதிகளை மீறும் வண்ணமோ அல்லது உங்களுக்கு ஒருவரின் ஸ்டேட்டசை வாட்ஸப்பை கம்பனிக்கு கூறி ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ நீங்கள் தாராளமாக ரிப்போர்ட் செயய்லாம்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்