நீ அவனை கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும்!
29 கார்த்திகை 2012 வியாழன் 09:47 | பார்வைகள் : 15626
அந்த விவசாயிக்கு வயதாகி விட்டது. மரணப் படுக்கையில் கிடந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் சுற்றி நின்றிருந்தனர். அப்போது தனது மனைவியை அழைத்த விவசாயி, ஜூன், நான் இறந்ததற்குப் பிறகு, நீ அந்த ஜானை கல்யாணம் பண்ணிக்கனும் என்றார்.
அதைக் கேட்ட மனைவி, இல்லை, நீங்கள் மறைந்த பிறகு நான் யாரையும் கட்டிக்க மாட்டேன் என்றார்.
ஆனாலும் விடாத விவசாயி, நீ நிச்சயம் ஜானை கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்றார்.
அதைக் கேட்ட மனைவி, ஏன் இந்தப் பிடிவாதம் என்று கேட்டார்.
அதற்கு விவசாயி சொன்னார்..ஒருமுறை குதிரை வாங்கும்போது என்னை அவன் ஏமாற்றி விட்டான். அதற்கு நான் பழிவாங்க வேண்டாமா.. அதனால்தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறேன்...


























Bons Plans
Annuaire
Scan