Paristamil Navigation Paristamil advert login

கிணறு விற்பனை!

கிணறு விற்பனை!

3 ஆவணி 2019 சனி 15:28 | பார்வைகள் : 14100


நம்மாளு கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார். 
 
மறுநாள் கடைத் தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது விற்றவன் அவரை சந்தித்தார். 
 
"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். 
 
அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம். 
ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம். 
 
மவனே யார் கிட்ட????? 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்