வான்கோழி பிரியாணி..!

8 மாசி 2023 புதன் 16:45 | பார்வைகள் : 9926
விக்னேஸ்வரர்க்கு சுனில், அமல் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.
விக்னேஸ்வரர் ஒரு சுயநலவாதி. யாருக்கும் தானம் அளிப்பதை விரும்பமாட்டார்.
அவரைப் போலவே அவரது மூத்த மகன் சுனில் இருந்தான்.
ஆனால் அவனது இளைய மகன் அமல், இளம் வயதிலேயே இரக்க குணத்தோடும் கருணை மனதோடும் திகழ்ந்தான்.
அடுத்த நாள் தீபாவளியன்று, வீட்டில் என்ன சமையல் செய்யலாம்..? என்று மூவர் இடையே விவாதம் எழுந்தது.
விவாதத்தின் முடிவில் வான்கோழி பிரியாணி செய்யலாம் என்று ஒரு தரப்பாக முடிவானது.
அதன் பின்னர் அமல், “தன் சொந்த பந்தங்களுக்கு பகிர்ந்து கொடுத்து நாம் உண்ண வேண்டும்” என்று கூற, விக்னேஷ்வரரும் சுனிலும் இதை பயங்கரமாக எதிர்த்தனர்.
அமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அடுத்த நாள் வான்கோழி பிரியாணி தயார் ஆனது.
கோவிலுக்கு சென்று வந்தே சாப்பிடலாம் என்று நினைத்து மூவரும் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்கு முன்பாக அந்த ஊருக்கு புதிதாக வந்திருந்த பிரசித்தி பெற்ற சாமியாரை அனைவரும் வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்தனர்.
ஆனால் அவரோ வலுக்கட்டாயமாக முடியாது என்று கூறிவிட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுனில் தனது அப்பாவை பார்த்து, ” அவரை நீயும் வீட்டிற்கு சாப்பிட அழைக்கலாம்.
அப்படி அழைத்தால் தானே உன்னையும் ஊரில் பெரியவர் என்று எல்லோரும் நினைப்பார்கள் இது கூட தெரியாதா..?” என்று கோபப்பட்டு கொண்டான்.
அந்த உடனே விக்னேஸ்வரர் சுனிலை பார்த்து, “அழைக்கலாம் ஆனால் சாப்பிட வந்து விட்டால் என்ன செய்வது..?” என்றார்.
அதற்கு சுனில், “அவர் சாப்பிட வர மாட்டார் என்பதை தெரிந்து தானே நான் அழைக்க சொல்கிறேன்.
அவர் சுத்த சைவம் கட்டாயமாக நம் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டார்” என்று கூறி நக்கலாக சிரித்து கொண்டான்.
சுனில் யோசனையின் படி விக்னேஸ்வரர் அந்த சாமியாரை வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்தான்.
அவர் மறுக்க தலையசைக்கும் நேரத்தில் சுனில் முந்திக்கொண்டு, “எங்கள் வீட்டில் இன்று வான்கோழி பிரியாணி நீங்கள் கட்டாயமாக சாப்பிட வாருங்கள் (அப்படி சொன்னால் தான் சாமியார் வீட்டிற்கு வர மாட்டார் என்று நினைத்து) என்று சொன்னான்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025