Paristamil Navigation Paristamil advert login

தீர்மானம்

 தீர்மானம்

2 பங்குனி 2023 வியாழன் 11:52 | பார்வைகள் : 10424


ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத தந்தையும் மகனும் இருந்தனர். ஒரு நாள் தந்தை விருந்துக்கு ஒருவரை அழைத்திருந்தார்.

 
 எனவே விருந்தினர்காகக் கறிவாங்கி வரும்படி மகனைப் பக்கத்துப் பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார். 
 
கறியினை வாங்கி வரும்போது பட்டணத்து வாயிலில் தன்னை நோக்கி ஒருவர் நடந்து வருவதைக் கவனித்தான் மகன்.
 
 எதிரும் புதிருமாக வந்த அவர்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் வழிவிட்டு விலகாமல் அந்தக் குறுகிய வாசலில் நெடுநேரம் நின்றனர்.
 
பட்டணம் சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராத மகனைத் தேடித் தந்தை வந்தார். 
 
மகனைப் பட்டணத்து வாயிலில் கண்டார் தந்தை. கண்டதும் சொன்னார். 
 
“கறியை எடுத்துக் கொண்டு நீ வீட்டிற்குபோய் விருந்தினரோடு இரு. உனக்குப் பதிலாக இந்த மனிதனை நான் இங்கு எதிர்த்து நிற்கிறேன்”.

வர்த்தக‌ விளம்பரங்கள்