Paristamil Navigation Paristamil advert login

திடீர்ப் பணக்காரன்

திடீர்ப் பணக்காரன்

4 பங்குனி 2023 சனி 09:03 | பார்வைகள் : 10460


வறியவன் ஒருவன் பணம் படைத்தவன் ஆனான். வந்த வாழ்வில் முந்தியதை மறந்தான். ஒரு நாள் காலைத் தன் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, வீட்டிற்குள் சலிப்போடு நுழைந்தான். சலிப்புக்குக் காரணம் கேட்டாள் மனைவி. 

“தோட்டத்திலுள்ள மலர்களைப் பார்வையிடும்போது, செம் மலரிலிருந்து ஒரு பனித்துளிப்பட்டு நனைந்துவிட்டேன். பனிக் காய்ச்சல் வந்து விட்க்கூடாது உடனே மருத்துவரைக் கூப்பிடு” என்றான் அவன். 

“நாம் இருவரும் பிச்சைக்காரரர்களாய்ச் சந்தித்த அந்தக் கசப்பான நிகழ்ச்சியை நீங்கள் மறந்து வீட்டீர்களா? அன்றிரவு முழுவதும் கொட்டிய மழையில் ஒதுங்க இடமின்றி ஒரு மூங்கில் புதரில் நனைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தோம். அதைவிடவா இப்போது அதிகம் நனைந்துவிட்டீர்கள்? என்று கேட்டாளே ஒரு கேள்வி, அவன் மனத்தில்படும்படி.

வர்த்தக‌ விளம்பரங்கள்