இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு..!

20 ஐப்பசி 2017 வெள்ளி 12:05 | பார்வைகள் : 12553
இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் சிறுவர், சிறுமிகளின் மனநலம் பாதிக்கும் என கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகள் குறித்து கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
29 பள்ளிகளில் படிக்கும் 8 முதல் 11 வயது வரையிலான 1100 சிறுவர், சிறுமிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகளின் தூக்கம் பாதிப்பு, மனநலம் பாதிப்பு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும். இதனால் உளவியல் கோளாறுகள் ஏற்படும்.
மன அழுத்தம் உண்டாகும் என தெரியவந்துள்ளது. எனவே இரவில் தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட் போனில் பேசுவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்களில் சிறுவர், சிறுமிகள் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025