உலகின் ஆகத் தொலைவான விமானப் பயணச் சேவை பற்றி தெரியுமா?

9 மார்கழி 2017 சனி 05:31 | பார்வைகள் : 12778
நம்மில் சிலருக்கு விமானத்தில் பயணம் செய்வது விருப்பமாக இருக்கலாம். ஆனால், தொலைதூர விமானப் பயணம் என்றால் சற்று சலிப்பு வரலாம்.
சரி. உலகின் ஆகத் தொலைவான விமானப் பயணச் சேவை எது?
ஆக்லந்திலிருந்து கத்தார் தலைநகர் டோஹாவுக்குச் செல்வதே உலகின் ஆகத் தொலைவான விமானச் சேவை எனக் கருதப்படுகிறது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அந்தச் சேவையை வழங்குகிறது. அந்தப் பயண நேரம் 17மணி 30 நிமிடங்கள்.
சுமார் 14,535 கிலோமீட்டர் தூரம் செல்கிறது அந்த விமானச் சேவை. அதில் 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளின் நேரத்தைக் கடந்து செல்லலாம்.
என்றாலும் விரைவில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதனை முறியடியத்து ' உலகின் ஆகத் தொலைதூர விமானச் சேவை' என்ற பெருமையைப் பெறக்கூடும்.
சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கிற்கு நேரடி விமான சேவையை மீண்டும் அது தொடங்கினால் அது சாத்தியமாகும். அதன் தூரம் 15,288 கிலோமீட்டருக்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.