Paristamil Navigation Paristamil advert login

பூனைகளை விட நாய்களுக்குக் கூடுதல் அறிவு: ஆய்வில் தகவல்

பூனைகளை விட நாய்களுக்குக் கூடுதல் அறிவு: ஆய்வில் தகவல்

17 மார்கழி 2017 ஞாயிறு 13:44 | பார்வைகள் : 12242


நாய்ப் பிரியர்களுக்குத் தித்திப்பாகவும் பூனைப்பிரியர்களுக்குக் கசப்பாகவும் இச்செய்தி இருக்கும்...
 
பூனைகளைவிட நாய்களுக்கே அதிக அறிவு இருப்பதாக அண்மை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
 
நாய்கள், பூனைகளைவிட அதிக மூளை அணுக்களைக் கொண்டிருப்பதாக, அனைத்துலக ஆய்வாளர்களைக் கொண்ட குழு  தீர்மானித்தது. அதிக மூளை அணுக்கள் கொண்ட விலங்குகளுக்கு உள்வாங்கும் திறன் அதிகம் என்று அவர்கள் கூறினர்.
 
நாய் மூளையையும் பூனை மூளையையும் நுண்பெருக்கி வழி ஆராய்ந்தபோது விஞ்ஞானிகள் அந்தத் தகவலைக் கண்டுபிடித்தனர்.
 
பூனையின் மூளையில் 250 மில்லியன் மூளை அணுக்கள் இருப்பதாகவும் நாயின் மூளையில் 429 மில்லியன் மூளை அணுக்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்