புதிய வகை தவளை இனம் கண்டுபிடிப்பு!
23 மாசி 2017 வியாழன் 16:06 | பார்வைகள் : 16746
இந்தியக் காடுகளில் கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை, இரவில் பூச்சிகளைப் போன்று ஒலிகளை எழுப்பக்கூடியவை.
இந்தியாவின் மேற்கு கரைக்கு இணையாக இருக்கும் மலைப்பகுதி, பல அபாயகரமான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
“இந்த சிறிய தவளைகள் ஒரு நாணயத்திலோ அல்லது கட்டை விரல் நகத்திலோ கச்சிதமாக அமரக்கூடியவை” என இந்த புதிய இனத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொனாலி கார்க் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan