பெண்களால் மனநிலையை எளிதாக அறிய முடியும்! ஆய்வில் தகவல்

10 ஆனி 2017 சனி 04:13 | பார்வைகள் : 13101
மனிதர்களின் கண்களை பார்த்து அவர்களது மனநிலையை அறியும் சக்தி பெண்களுக்கு உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் என்ற கருத்தே இதுவரை இருந்தது.
ஆனால் பெண்களால் ஒருவருடைய கண்களை பார்த்து, அவரது மனநிலையை அறிய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 89 ஆயிரம் பேரிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை ஆண்களை விட பெண்களுக்கே பெரும்பான்மையாக இருப்பதை கண்டறிந்தனர்.
மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025