மனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்!
3 ஆனி 2018 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 15555
மனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து தேக்கிவைக்க நமது மூளையில் தனிப்பகுதி அமைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்மிக மனம் மற்றும் உடலமைப்பு துறை நிபுனர்கள் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் 27 இளம்வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்தகால மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் நிகழ்காலத்தில் அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் கையாண்ட ஆன்மிக அனுபவங்கள் தொடர்பாக அவர்களின் மூளையின் வெளிப்பக்கம் விழிப்புணர்வு மற்றும் கவனித்தல் திறனுக்கு காரணமாக உள்ள சாம்பல்நிற பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தி, மூளைக்குள் நடைபெறும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.
ஆன்மிக அனுபவங்கள் மதம்சார்ந்து அமைந்திருக்காவிட்டாலும், இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஆர்வத்துடன் ஈடுபடுதல் போன்ற தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க இந்த பகுதியில் தனி இடம் அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஒருமித்த ஆர்வத்துடன் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆன்மிகநிலை சார்ந்த அனுபவங்கள் மக்களின் வாழ்வில் விருப்பத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான காரணங்களாக அமையும்.
மூளையில் பதிவாகும் ஆன்மிக அனுபவங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மனநல பாதிப்பு மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் நிலையில் இருந்து மீளுதல் போன்வற்றை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக அமைந்ததாக யேல் பல்கலைக்கழக மனநலத்துறை பேராசிரியர் மார்க் போட்டென்ஸா குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan