Paristamil Navigation Paristamil advert login

கொட்டாவி ஏன் வருகிறது?

கொட்டாவி ஏன் வருகிறது?

24 ஆனி 2018 ஞாயிறு 17:16 | பார்வைகள் : 13485


நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.
 
மேலும் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூறுவார்கள்.
 
கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றால் உண்டாகிறது.
 
கொட்டாவி வருவதற்கான காரணம்
 
நாம் சோர்வாக இருக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால், மூச்சு விடுவது மெதுவாக இருக்கும்.
 
மேலும் கொட்டாவி விடும் போது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு உடலில் இருந்து வெளியேறும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்