Paristamil Navigation Paristamil advert login

4,400 ஆண்டுப் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

4,400 ஆண்டுப் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

16 மார்கழி 2018 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 12096


எகிப்திய தொல்லியல் ஆய்வாளர்கள் 4,400 ஆண்டுப் பழமையான கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
 
சக்காரா நகரில் (Saqqara) உள்ள அந்தக் கல்லறையைச் சுற்றிலும் Hieroglyphs எனப்படும் சொற்சித்திரங்கள் பல வண்ணங்களில் உள்ளன.
 
எகிப்து வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் பாரோ மன்னரின் சிலைகளும் அங்கு காணப்படுகின்றன.
 
பாரோ மன்னரின் அரசவையில் தலைமை குருவாக இருந்த வாட்யே (Wahtye), அவருடைய அம்மா, மனைவி மற்றும் உறவினர்களை அந்தச் சொற்சித்திரங்கள் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
தொல்லியலாளர்கள் இன்று அந்தக் கல்லறையைத் தோண்டும் பணியைத் தொடங்குவர். அதனால் தொன்மையான இன்னும் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்படலாம்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்