15,600 ஆண்டுப் பழைமையான பாதச்சுவடு கண்டுபிடிப்பு!
28 சித்திரை 2019 ஞாயிறு 11:27 | பார்வைகள் : 7213
சிலியின் தென்பகுதியில் 15,600 ஆண்டுப் பழைமையான பாதச்சுவடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பழைமையான பாதச்சுவடு அது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2010ஆம் ஆண்டில் அதனை முதன்முதலில் Universidad Austral of Chile ஆய்வுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடித்தார்.
அது விலங்கு ஒன்றின் சுவடாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் அப்போது ஊகித்தனர். பின்னர் அது மனிதனின் பாதச்சுவடு என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.
பாதச்சுவட்டின் பழைமையைக் கண்டறியும் முயற்சியிலும் ஆய்வாளர்கள் இறங்கினர்.
12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் அமெரிக்கக் கண்டத்தில் நடமாடியுள்ளனர் என்பதைப் பாதச்சுவடு புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

























Bons Plans
Annuaire
Scan