இஸ்ரேலில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கக் காசுகள் கண்டுபிடிப்பு!

27 ஆவணி 2020 வியாழன் 07:01 | பார்வைகள் : 12420
இஸ்ரேலில் நடந்த அகழாய்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏராளமான தங்கக்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் இளைஞர்கள் சிலருடன் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மண்பானையில் மண்மூடிய நிலையில் காசுகள் இருப்பதைக் கண்டனர். அவற்றை ஆராய்ந்த போது, அவை அனைத்தும் தங்கக்காசுகள் என்பது தெரியவந்தது.
இந்த நாணயங்கள் 9ம் நூற்றாண்டில் அப்பாஸித் காலிபா காலத்தைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்ட ஆய்வாளர்கள் 24 காரட் சுத்தமான இந்தக் காசுகள் 425 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகத்திற்கு மாற்றாக தங்கத்தின் பயன்பாடு இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025