இயற்கையால் பதப்படுத்தப்பட்ட 56,000 வயது நரிக்குட்டி

23 மார்கழி 2020 புதன் 09:05 | பார்வைகள் : 14040
உறைபனி நிலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதைந்துகிடந்த பெண் நரிக்குட்டி ஒன்று கனடாவின் யூகோன் மாநிலத்தில், 4 ஆண்டுகள் முன் கண்டெடுக்கப்பட்டது.
அதன் தொடர்பில், பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
ஆய்வாளர்கள் அந்த நரிக்குட்டியின் வயது, அது தனது வாழ்நாளில் எதைத் தின்றது, அது ஏன் மாண்டது என்பனவற்றை ஆய்வுகளின் மூலமாக ஊகித்துள்ளனர்.
நரிக்குட்டியும் அதன் தாயும் மீன் உள்ளிட்ட கடல்வாழ் விலங்குகளைத் தின்றதாக அவர்கள் நம்புகின்றனர்.
மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த நரிக்குட்டி, சுமார் 57,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அது பிறந்த, சுமார் 7 வாரங்களில் மாண்டிருக்கலாம் என்றும் அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
நரிக்குட்டி இருந்த பனிக்குகை திடீரென இடிந்து விழுந்ததால், அது மாண்டதாக நம்பப்படுகிறது.
அது பசியால் மாண்டுபோகவில்லை என்றும், அது நீண்ட நேரம் வலியில் துடிக்காமல் உடனே மாண்டு போனது என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.