Paristamil Navigation Paristamil advert login

45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!

 45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!

15 தை 2021 வெள்ளி 07:18 | பார்வைகள் : 15078


இந்தோனேசியாவில் மிகவும் பழமையான குகை ஓவியம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த ஓவியம் சுமார் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பன்றியின் உருவத்தை மையமாக கொண்டு வரையப்பட்டுள்ள ஓவியம், அது சண்டையிட தயாராக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 
ஓவியம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைக்குள் வறண்ட காலங்களில் மட்டுமே செல்ல முடியும் என்றும், மழை காலங்களில் இந்த குகை நீரினால் சூழப்பட்டிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்