Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படும் பழமை வாய்ந்த பொக்கிஷங்கள்!

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படும் பழமை வாய்ந்த பொக்கிஷங்கள்!

6 வைகாசி 2023 சனி 08:43 | பார்வைகள் : 12241


பிரித்தானியாவில் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அவ்விழாவில் பயன்படுத்தப்படும் பொருட்களை பற்றிய அரிய தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரித்தானியாவில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவ்விழாவில் பயன்படுத்தப்படும் அறிய பொக்கிஷங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
 
 
1000 ஆண்டு பழமையான வரலாற்றை கொண்ட பிரித்தானிய மன்னர் பரம்பரையின் காலத்தால் அழியாத பல பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தபடவுள்ளன.
 
முடிசூட்டும் நாற்காலி
இந்த நாற்காலி 1308ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் எட்வர்ட் என்பவரது முடிசூட்டு விழாவில் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த நாற்காலி கடந்த 700 ஆண்டுகளாக மன்னர்கள் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
விதியின் கல்
ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் என்றும் அழைக்கப்படும் விதியின் கல்லை வைப்பதற்காக சுமார் 1300 இல் முடிசூட்டு நாற்காலி செய்யப்பட்டது.
 
இந்த கல், ஸ்காட்லாந்தின் முடியாட்சியின் அடையாளமாகும்,இது  "ஸ்காட்ஸின் சுத்தியல்" என்று அழைக்கப்படுகிறது. மன்னர் முதலாம் எட்வர்ட் I  இதனை  கைப்பற்றினார்.
 
ஆம்புல்லா
இந்த தங்க கழுகு வடிவ பாத்திரத்தில் மன்னர் மற்றும் ராணிக்கு அபிஷேகம் செய்யும் புனித எண்ணெய் ஊற்றப்படுகிறது.
 
இது 14 ஆம் நூற்றாண்டின் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆம்புல்லாவின் வாய் பகுதியில் ஒரு துளை உள்ளது, அது முடிசூட்டுக்கு எண்ணெய் ஊற்ற பயன்படுகிறது.
 
அரச மகுடம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கின்போது காணப்பட்ட இந்த மகுடம் மன்னருக்கு அணிவிக்கப்படும்.
 
இதன் எடை 1.06 கிலோகிராம், இதில் 2,868 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும் என்பதோடு, முத்து, மரகதம், நீலக்கல் ஆகியவையும் பதிக்கப்பட்ட மகுடமாகும்.
 
செங்கோல்
இந்த சிலுவையுடன் கூடிய செங்கோலின் உச்சியில் உலக புகழ் பெற்ற பெரிய வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
 
முடிசூட்டு கரண்டி
இந்த கரண்டியானது இரண்டு குழிகளை கொண்டது. இதில் எண்ணையை ஊற்றி, இரண்டு விரல்களை தொட்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்வதற்காக பேராயரால் தயாரிக்கப்பட்டதாகும்
 
முடிசூட்டு விழா பைபிள்
முடி சூட்டு விழாவின் போது, ​​கேன்டர்பரியின் பேராயர், பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட கிங் ஜேம்ஸ் பைபிளை மன்னருக்கு பரிசளிப்பார்.
 
 
 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்