கனடாவில் 30000 வயது மாமூத் கண்டுபிடிப்பு!

30 ஆனி 2022 வியாழன் 19:00 | பார்வைகள் : 18970
வட அமெரிக்காவில் மம்மி ஒன்று அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாமூத் என்ற விலங்கினத்தின் குட்டியின் மம்மி ஆகும். ட்ரொண்டேக் ஹ்வாச்சின் முதியவர்களால் நன் சோ கா என்று பெயரிடப்பட்டது.
கனடிய தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்த மாமூத் குட்டி ஒன்றின் மம்மியின் (mummified baby woolly mammoth) எச்சங்களை க்ளோண்டிக் தங்க வயல்களில் கண்டுபிடித்துள்ளனர்.
யூகோன் அரசாங்கம் மற்றும் Tr'ondek Hwech'in First Nation வெளியிட்டுள்ள செய்திகளின்படி, சுரங்கத் தொழிலாளர்கள் யுரேகா க்ரீக்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த மம்மி எதிர்பாராத விதத்தில் கிடைத்தது.
வட அமெரிக்காவில் கிடைத்த முழுமையான மம்மியாக இருக்கும் இந்த மாமூத் குட்டிக்கு நன் சோ கா (Nun cho ga) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹேன் மொழியில் "பெரிய விலங்கு குழந்தை" என்று பொருள்படும் நன் சோ கா, யூகோனில் காட்டு குதிரைகள், குகை சிங்கங்கள் மற்றும் ராட்சத புல்வெளி காட்டெருமைகளுடன் சுற்றித் திரிந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
மம்மியான மாமூத் குட்டி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக பேசிய கனடாவின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ரஞ்ச் பிள்ளை (Ranj Pillai), "யுகோன் எப்போதும் பனி யுகம் மற்றும் பெரிங்கியா என தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைவராக இருந்து வருகிறது. மம்மியான மாமூத் குட்டி நன் சோ கா கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்தார்.
"பிளேசர் சுரங்கத் தொழிலாளர்கள், ட்ரொண்டேக் ஹ்வாச்சின் மற்றும் யூகோன் அரசாங்கம் இடையிலான வலுவான கூட்டணியே இது போன்ற அரிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணம்," என்று பிள்ளை மேலும் கூறினார்.
"இது கனடாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியாகும். நமது மரபுகள், கலாச்சாரம் மற்றும் சட்டங்களை மதிக்கும் வகையில் இந்த எச்சங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான செயல்முறையின் அடுத்த படிகளில் யூகோன் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்" என்று Tr'ondëk Hwëch'in இன் தலைமை ராபர்ட்டா ஜோசப் கூறினார்.
இந்த மாமூத்கள், வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்துவந்தன. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு சுற்றித் திரிந்தன என்று பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025