Paristamil Navigation Paristamil advert login

ஏலத்தில் இதுவரை ஆக அதிக விலையில் விற்பனையான Jeans

ஏலத்தில் இதுவரை ஆக அதிக விலையில் விற்பனையான Jeans

19 ஐப்பசி 2022 புதன் 19:55 | பார்வைகள் : 11816


1880களில் பயன்படுத்தப்பட்ட Levi's  காற்சட்டை (Jeans) ஏலத்தில் 87,000 டொலருக்கும் அதிகமான விலையில் விற்பனையாகியுள்ளது.

 
இதுவரை ஆக அதிகமான விலையில் விற்பனையான jeans காற்சட்டை அதுவே என்று CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
 
காற்சட்டை சிறிது கிழிந்துள்ளது என்றாலும் அது இன்னும் அணியக்கூடிய நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டது.
 
அது 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பழைய சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
காற்சட்டைக்கு ஒரு தனித்துவமான அம்சம் உண்டு. அதன் பையில் 'வெள்ளை இன ஊழியர்களால் செய்யப்பட்ட ஒரே வகை Jeans' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் சீனத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு 1882ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. அதைக் குறிப்பிடும் வகையில் காற்சட்டையில் அந்தச் சொற்றொடர் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
 
காற்சட்டைகளில் சொற்றொடர் அச்சிடப்படும் போக்கு 1890களில் நிறுத்தப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்