லட்சியம்...
24 ஆவணி 2023 வியாழன் 12:15 | பார்வைகள் : 10509
உன் பாதையில் வேகத்தடைகள் இருக்கலாம்.
ஆனால் உன் லட்சியத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் சிறிதும்
மனத்தடை இருக்கக் கூடாது.
உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல்,
வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம்.
முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே இருக்கும்.
தோல்வி அடைந்தவனுக்கு தான் வெற்றியின் அருமை தெரியும்.
எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு வெற்றிக்காக போராடு.
கடிகார முள் போல வாழ்வது வாழ்க்கை அல்ல
காலத்திற்கு ஏற்றார் போல் வாழ்வது தான் வாழ்க்கை.
வந்ததை எண்ணி வருந்தாதே
வரப்போவதை எண்ணி கலங்காதே
போனதை எண்ணி புலம்பாதே
இதுதான் வாழ்க்கை
இதை என்றும் நீ மறவாதே.


























Bons Plans
Annuaire
Scan