கவர்ச்சியான உடையால் ஆண்களை கவர முடியுமா?
30 தை 2014 வியாழன் 09:22 | பார்வைகள் : 15978
உங்களுடைய மனதுக்கு பிடித்த காதலரை கவருவதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.
நீங்கள் பருவ வயதில் இருந்தாலும் சரி, 25 வயதடைந்த பக்குவமான பெண்ணாக இருந்தாலும், ஆண்களை கவருவதற்காக இருக்கும் அணுகுமுறை ஒன்று தான்.
வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு பெண்ணும் தன்னால் இயன்ற வரையிலான மிகச்சிறப்பான வழிமுறைகளை பின்பற்றுவார். ஆனால், இவ்வாறு அவரை கவரும் போது, நீங்கள் செய்யக் கூடாத செயல்கள் சிலவும் உள்ளன.
பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்...
ஒன்றும் தெரியாதது போன்று இருக்க வேண்டாம்
பெரும்பாலான பெண்கள் ஆண்களுக்கு முன்னால் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நடிப்பார்கள். இவ்வாறு நடிப்பதன் மூலம், தங்களுடைய மனதுக்குப் பிடித்தவரை எளிதில் கவர முடியும் என்று நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு ஆணாக இருப்பவர் பெண்ணிடம் அறிவையும், உணர்வையும் மிகவும் எதிர்பார்ப்பார். எனவே, முதிர்ச்சியுடனும், அறிவை ஆதாரமாகவும் கொண்டு செயல்படுங்கள், பையன் பின்னால் வரத் தொடங்குவான்.
உடலை ஒட்டியபடி மற்றும் கண்ணாடி போன்ற உடைகள் வேண்டாம்
சில பெண்கள் அவர்கள் அணியும் உடைகளாலேயே ஆண்களுடனான நட்பை இழந்து நிற்பார்கள். தங்களுடைய உடலை காட்டும் குட்டையான உடைகள், கவர்ச்சியான பேண்ட்கள் போன்றவற்றை அணிந்தால் தங்களுக்கு பிடித்த ஆடவரை கவர முடியும் என்று பெண்கள் நினைப்பார்கள். இதனால் இழப்புகள் தான் மிஞ்சும்... ஜாக்கிரதை. தங்களுடைய பெண்கள் இது போன்ற உடைகளில் இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள், ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நீங்கள் அது போன்ற உடைகளையே தொடர்ந்து அணிந்து வந்தால், உங்களுக்கு விருப்பமான அவர் மனதில் காதலியாகவோ அல்லது மனைவியாகவோ இடம் பிடிக்க முடியாது. எனவே, சாதரணமான, கண்ணியமான உடைகளையே அணிய முயற்சி செய்யுங்கள். காதல் கூடும்.
நடத்தையை கவனியுங்கள்
நல்ல நடத்தையும், ஒழுக்கமும் உடைய பெண்களிடம் ஆண்கள் எளிதில் விழுந்து விடுவார்கள். மற்றவர்களிடம் எளிமையாக நடந்து கொள்வது உங்களை வளமானவராக காட்டும். ஒரு பெண்ணாக இருப்பவள் எளிமையின் அடையாளமாகவும், அவள் புதியவர்களிடம் எப்படி பேசுகிறாள் என்பதைப் பொறுத்துமே மதிப்பிடப்படுவாள். எனவே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் மதித்து நடக்கத் தொடங்குகள், அது தெருவில் உள்ள பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி, உங்களுடைய அப்பாவாக இருந்தாலும் சரி!
சபிக்க வேண்டாம்!
பெரும்பாலான பெண்களிடம் இந்த பிரச்சனை உள்ளது. உங்களிடம் இந்த குணம் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று சொல்லும் பழக்கம் பெண்களுக்கு எங்கிருந்து தான் வந்ததோ தெரியாது. ஆனால் இதை பயன்படுத்தாத பெண்கள் யாரும் கிடையாது. அவரை பாராட்டாமல் இருந்தால் கூட சரி, சபிக்க வேண்டாம். நீங்கள் சரியாக தான் பேசுகிறீர்கள் என்றாலும் கூட, அவரை சபிக்கும் போது அவமானப்படுத்தி விடுகிறீர்கள். இந்த செய்கையின் மூலமாக பொது இடங்களிலும் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறீர்கள். இது பின்னாளில் உங்கள் விரிவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற குறை கூறும் செய்கைகளை தவிர்த்து விட்டு, அமைதியை கடைப்பிடியுங்கள்.
இடைவெளி வேண்டும்
ஆண்களை கவர விரும்பும் பெண்கள் செய்யும் பெரிய தவறு இதுதான். அவனுடைய நண்பர்கள் அனைவரிடமும் இருந்து விலகி இருப்பது, குடும்பத்தினரிடம் இருந்து அவரை பிரித்து வைக்க முயற்சிப்பது போன்ற விஷயங்கள் குடும்ப உறவுகளுக்கே உலை வைக்கும் வேலையை செவ்வனே செய்து விடுகின்றன. இது போன்ற தவறான செயல்பாடுகள் உங்களுடைய உறவை எந்த வகையிலும் மேம்படுத்தப் போவதில்லை என்பதையும், மாறாக உறவை துண்டிக்கச் செய்து விடும் என்பதையும் மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டுமல்லாமல், வேறு சில முக்கியமான மனிதர்கள் அவருடைய வாழ்வில் உள்ளார்கள் என்பதையும் மற்றும் அனைவருக்காகவும் அவர் தன்னுடைய நேரத்தை செலவிட வேண்டும் என்பதையும் உணருங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan