Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அடிக்கடி முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மையா.!!

அடிக்கடி முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மையா.!!

11 பங்குனி 2022 வெள்ளி 10:01 | பார்வைகள் : 13975


 கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.பிரிந்திருக்கும் உதடுகள், மேலும் இரண்டு உதடுகளோடு சேர்ந்துகொள்ளும்போது முத்தம் உருவாகிறது.

 
பிடித்தமானவர் களுக்கு நிறைய முத்தங்களை கொடுக்கும்போது அது முத்தமழையாகிவிடுகிறது. முத்தம் உடலின் வெளிப்புற நிகழ்வாக இருந்தாலும், முத்தம் கொடுக்கும்போது உடலின் உள்புறமும் சேர்ந்து சிலிர்த்துவிடுகிறது. முத்தம் பாலியலை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது அல்ல. அன்பை வெளிக்காட்டவும், பாசத்தை பகிர்ந்துகொள்ளவும் அது மிக அவசியம்.
 
‘உனக்கு நான் இருக்கிறேன். உன் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நான் உன்னோடு இறுக்கமாக இருப்பேன்’ என்று, துக்கத்தில் இருப்பவரை கட்டிப்பிடித்து தேற்றும்போது அது ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ஆகிவிடுகிறது. அதுபோல் முத்தத்திலும் உணர்வுபூர்வமான விஷயங்கள் இருக்கின்றன. அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தி, மருத்துவ முத்தமாகிவிடுகிறது.
 
முத்த மருத்துவம் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?மனதுக்கு பிடித்த இருவர் உற்சாகமாக முத்தம் கொடுத்துக்கொள்ளும்போது அது அவர்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
 
முத்தம் கொடுக்கும் போது மன அழுத்தம், மனக் கவலையும் நீங்கும். உதட்டோடு உதடு சேர்த்து ஆங்கில முத்தம் கொடுப்பதால் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமொடாலஜி’ என்று பெயர்.
 
இரு கன்னங்களையும் கைகளால் பற்றி பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம் உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். இந்த முத்தம் அன்புக்குரியவர்களின் மீது நம்பிக்கையினையும் நேசத்தினையும் அதிகரிக்கும். இந்த முத்தம் மனதை வலுவாக்கும்.
 
தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்கும் தன்மை அன்பான முத்தத்திற்கு இருக்கிறது. மருந்தோடு சேர்ந்து முத்தமும் இதில் முக்கியபங்காற்றும்.முத்தம் கொடுக்கும்போது கருப்பையின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படும்.
 
கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர் களுக்குள்ளும் கொடுக்கப்படும் முத்தம் ‘எஸ்கிமோக்கள்’ முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.
 
 முப்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்தால் அவர்களுடைய வாழ்நாள் நீடிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருமனிதன் தனது சராசரி வாழ்நாளில் இரண்டு வாரங்களை முத்தமிடுவதற்காக செலவிடுகிறான். நீங்கள் கூடுதலாக முத்தம் கொடுத்தும் இ்ந்த கால அளவை நீடித்துக்கொள்ளலாம்.
 
முத்தம் கொடுக்கும் போது 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் பொலிவாகிறது. தம்பதிகள் முயற்சித்துப் பார்க்கலாம்.முத்தம் மூளைச் செயல்பாட்டை தூண்டி மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதை வயதான தம்பதிகள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
 
குழந்தையில்லாதவர்கள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. இதனால் கருமுட்டையின் வளர்ச்சி மேம்படும்.முக்கியமான வேலைக்கு செல்லும்போது இணைக்கு முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன் எளிதாகவும் முடியும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் செல்லும் வேலை சுமூகமாக முடியும்.
 
ஆண்மைக் குறைபாடோ, பெண்மைக் குறைபாடோ இருப்பவர்கள் தொடர்ந்து முத்தம் கொடுப்பதால் குழந்தையின்மை பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். முத்தம் கொடுப்பதால் கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
 
உங்களை ஈர்த்த உங்கள் இணையின் கண் இமைகளில் முத்தமிடுங்கள். அவர் மகிழ்ச்சியடைவதுடன் உங்களிடம் அன்பை திரும்பத் தருவார். அங்கே முத்தமழை பொழிய வாய்ப்பிருக்கிறது.முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்களின் இயக்கம் தூண்டப்பட்டு சீராக நடைபெறுவதால் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும்

வர்த்தக‌ விளம்பரங்கள்