Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

திருமண வாழ்க்கையில் சிலர் தங்கள் துணையை ஏமாற்றுவது ஏன்..?

திருமண வாழ்க்கையில் சிலர் தங்கள் துணையை ஏமாற்றுவது ஏன்..?

1 ஆவணி 2022 திங்கள் 05:35 | பார்வைகள் : 14859


 திருமண பந்தம் நீடித்து, நிலையானதாக இருக்க வேண்டும் என்றால், அவ்வப்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும் மற்றும் எந்தவொரு பிரச்சனைக்கும் சண்டையிடுவதை காட்டிலும் பேசி தீர்வு காண வேண்டும்.

 
துரோகம் என்பது நிச்சயமாக மோசமான விஷயம் தான். அதிலும் குறிப்பாக உங்களால் மிகவும் நேசிக்கப்படக் கூடிய ஒருவர் உங்களை ஏமாற்றும்போது அதன் வலி இன்னும் அதிகம். ஒருவருடைய மன ரீதியான, உடல் ரீதியான தேவைகளை அவரது வாழ்க்கைத் துணை பூர்த்தி செய்யாதபோது, அங்கு திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டு விடுகிறது. ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் பார்ட்னரை ஏன் ஏமாற்றுகிறார்கள் என்ற காரணத்தை அறிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். சிலர் உண்மையான பந்தத்தில் இருந்து விலகி, போலியான பந்தத்தில் இணைவதன் மூலமாக அதிக சுய திருப்தி அடைகின்றனர்.
 
இதுகுறித்து மனநல ஆலோசகர்கள் கூறுகையில், “எந்தவொரு தம்பதியர் இடையேயும் மனப்பூர்வமான மற்றும் உடல்பூர்வமான பிணைப்பு இல்லாமல் போகும்போது, ஒருவர் மீது ஒருவர் ஆசையை இழக்கத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழலில், திருமணம் கடந்த புதிய உறவை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்’’ என்று தெரிவிக்கின்றனர். தனக்கு தேவையான கவனிப்பு தன்னுடைய வாழ்க்கை துணையிடம் இருந்து கிடைக்காதபோது, அதை மூன்றாம் நபரிடம் இருந்து எதிர்பார்க்கத் தொடங்குகின்றனர்.
 
இரண்டு விதமான காரணங்கள் : மனரீதியான பிணைப்பு மற்றும் உடல் ரீதியான தொடர்பு ஆகிய இரண்டு இல்லாமல் போவதே திருமணம் தாண்டிய உறவை தேடுவதற்கு காரணமாக அமைகிறது. தம்பதியர் இருவரும் நீண்ட காலமாக உடல் ரீதியாக ஒன்று சேராமல் இருந்தார்கள் என்றால், அங்கு திருமண பந்தம் தோல்வி அடைய தொடங்குகிறது.
 
நாம் எதிர்பார்க்கும் மன ரீதியான பிணைப்பு வாழ்க்கைத் துணையிடம் இருந்து கிடைக்காதபோது, மன ரீதியான ஆதரவை வேறு ஒரு இடத்தில் இருந்து எதிர்பார்க்க தொடங்குகின்றனர். உதாரணத்திற்கு எப்போதும் வீடு மற்றும் குழந்தை என்ற சிந்தனையிலேயே ஒரு மனைவி கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், அவரது கணவர் திருமணம் கடந்த உறவை நோக்கி பயணிக்க தொடங்குகிறார்.
 
உதாசீனப்படுத்துவது தவறு : ஒரு தம்பதியிரிடையே நீண்ட காலமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்லுறவு இருந்து வருகின்றது என்றாலும் கூட, மனதில் தனக்கே தெரியாமல் ஏற்படும் சலிப்பு காரணமாக வாழ்க்கைத் துணையை உதாசீனப்படுத்த தொடங்குகின்றனர். இதனால், சின்ன சின்ன வாதங்கள் கூட, பெரும் மோதல்களாக மாறி கடைசியில் திருமண பந்தம் தோல்வியில் முடிகிறது.
 
சமூக வலைதளங்களும் காரணம் : இன்றைய சூழலில், திருமணம் கடந்த உறவுகள் அதிகரிப்பதற்கு சமூக வலைதளங்களும் ஒரு காரணம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் ரகசியம் பாதுகாக்கப்படுவதால், தங்கள் பார்ட்னரை ஏமாற்றுவது குறித்து யாரும் குற்ற உணர்ச்சி கொள்வதில்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
மனம் விட்டு பேச வேண்டும் : திருமண பந்தம் நீடித்து, நிலையானதாக இருக்க வேண்டும் என்றால், அவ்வப்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும் மற்றும் எந்தவொரு பிரச்சனைக்கும் சண்டையிடுவதை காட்டிலும் பேசி தீர்வு காண வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்