Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அழகான நட்பை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி..?

அழகான நட்பை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி..?

12 புரட்டாசி 2022 திங்கள் 18:13 | பார்வைகள் : 14183


வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவற்றில் மிகவும் முக்கியமானது நட்பு. நட்பு என்பது எல்லா உறவுகளையும் விட மேம்பட்டது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நல்ல நண்பர்கள் அவ்வளவு எளிதில் கிடைக்க மாட்டார்கள். கிடைத்தாலும் நட்பு நீடிக்காது.வாழ்வில் எல்லா நேரத்திலும் துணையாக ஆதரவாக இருக்கும் அழகான நட்பை வலுப்படுத்தி மேலும் நீண்ட காலம் ஆரோக்கியமாக எப்படி வைத்துக் கொள்வது?

 
நம் வாழ்க்கையை அழகாக அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் நண்பர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. உண்மையான, எந்தவித சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு நட்பில் மட்டும் தான் கிடைக்கும். எல்லாருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அது நீண்ட காலம் தொடர முடியாது என்பது தான். ஒவ்வொரு முறையும் நாம் பல புதிய நபர்களைச் சந்தித்து அவர்களுடன் நட்பு பாராட்டுகிறோம். வாழ்க்கை, வேலை, உள்ளிட்ட காரணங்களால் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய் விடும்.
 
இதனால் நல்ல நண்பர்களை இழந்து விடுகிறோம். பல ஆண்டு நண்பர்கள் கூட காலமாற்றத்தால், வாழ்க்கை சுழற்சியால் பிரிந்து போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. என்னதான் தற்போது இணையம் வளர்ந்து டிஜிட்டல் வழியாக எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள முடிந்தாலும், நண்பர்களுடன் நேரடியாகப் பேசி சிரிப்பது, ஊர் சுற்றுவது என்பது போல இருக்காது. வாழ்வில் எல்லா நேரத்திலும் துணையாக ஆதரவாக இருக்கும் அழகான நட்பை வலுப்படுத்தி மேலும் நீண்ட காலம் ஆரோக்கியமாக எப்படி வைத்துக் கொள்வது?
 
நீண்ட கால நட்பை உருவாக்குவது எப்படி என்பது பற்றி, நட்பின் முக்கியத்தவம் பற்றி, புத்தகம் எழுதிய இரண்டு ஆசிரியர்களைப் பற்றி, அவர்கள் கூறியது பற்றி இங்கே பார்க்கலாம்.
 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் எவல்யூஷனரி உளவியலாளர் பேராசிரியரான ராபின் துன்பார் ‘பிரண்ட்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இவர் நண்பர்கள் மற்றும் நட்பைப் பற்றிக் கூறுகையில், ‘உங்களுடைய நட்பு எப்படி இருக்கிறது, எந்த அளவிற்கு ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் இருக்கிறது என்பது உங்களுடைய உடல் மற்றும் மன நலத்தைக் கண்டறியும் மிகப்பெரிய கருவியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுடன் பேசுவது மிகவும் முக்கியம் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நட்பின் உன்னதம் மற்றும் முக்கியத்துவம் இந்த உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகாமல் இருப்பதற்கு நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். அதிகபட்சமாக ஒரு நபருக்கு நெருக்கமான நண்பர்கள் என்பது ஐந்து பேர் வரை இருக்கலாம் என்று தனது ஆய்வில் இந்த பேராசிரியர் கண்டறிந்துள்ளார்.
 
மாறிவரும் நவீன உலகத்தில் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நீண்ட காலம் நட்பைத் தக்கவைப்பது என்பது சவாலாக இருக்கிறது. வெவ்வேறு காரணங்களால் நாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, வேறு மாநிலம், வேறு நாட்டுக்குக் கூட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு நட்பு அழகான நட்பு கிடைத்தாலும் அதை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வது என்பது சாத்தியமற்றதாக மாறிவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 
அதேபோலவே ‘பிசினஸ் ஆஃப் பிரெண்ட்ஷிப்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஷாஸ்தா நெல்சன் என்பவரும் இந்த பேராசிரியரின் ஆசிரியரின் கருத்தை ஆமோதித்துள்ளார். நாம் பலவீனமாக இருக்கும் நேரத்திலும், ஒருவரைப் பற்றி ஒருவர் எந்தவிதமான முடிவும் இல்லாமல், முரண்பாடுகளைத் தவிர்த்து அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்; ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்கிறோம்; இது அழகான அர்த்தமுள்ள உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். நட்பில் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பொறுமை அவசியம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்