Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அப்பாவிடமிருந்து மகள்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்....

அப்பாவிடமிருந்து மகள்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்....

23 புரட்டாசி 2022 வெள்ளி 12:31 | பார்வைகள் : 13437


 ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்பும் பாசமாக ஒட்டுதலுடன் இருப்பதும் இயல்புதான். குறிப்பாக, அப்பாவின் சில முக்கியமான குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை பெண் குழந்தைகள் அப்படியே கற்றுக் கொள்வார்களாம்.

 
பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அதையே குழந்தைகளும் பின்பற்றுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு அப்பா ஹீரோ, பெண் குழந்தைகளுக்கு அம்மா ரோல் மாடல் என்று கூறப்பட்டு வந்தாலும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்பும் பாசமாக ஒட்டுதலுடன் இருப்பதும் இயல்புதான். குறிப்பாக, அப்பாவின் சில முக்கியமான குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை பெண் குழந்தைகள் அப்படியே கற்றுக் கொள்வார்களாம். ஒரு அப்பா தனக்கே தெரியாமல் தன்னுடைய மகளுக்கு கற்றுத் தரும் முக்கியமான விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
 
பணத்தின் மதிப்பு : அப்பாக்கள் எப்படி, எதற்கு எவ்வாறு பணத்தை கையாள்கிறார்கள், செலவு செய்கிறார்கள் என்பதை மகள்கள் மிகவும் கூர்ந்து கவனிப்பார்கள். அப்பாவின் பார்வையில் பணத்துக்கு மதிப்பு இருந்தால், அது பெண்ணுக்கும் வந்துவிடும்.
 
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொள்ள முடியும் : ஒரு பிரச்சனையை, ஒரு சிக்கலை அல்லது நெருக்கடியான நேரத்தை அப்பா எவ்வாறு கையாள்கிறார்; தனக்கு நேர்ந்த துன்பங்களை எந்த அளவுக்கு தாங்கிக் கொள்கிறார் என்பதை ஒரு மகள் அப்படியே உள்வாங்கிக் கொள்வார். தந்தையால் எவ்வளவு அடித்தாலும் தாங்க முடியும் என்பதை கண்கூடாக பார்க்கும் பெண்ணுக்கும் அந்த மனப்பான்மை வளரும்.
 
குடிசையிலிருந்து கோபுரம் : வசிப்பதற்கு சரியான வீடு கூட இல்லாமல் இருந்த நிலை மாறி கோடீஸ்வரர்களாக மாறிய பல கதைகளை கேட்டிருப்போம். இத்தகைய கதைகள் மகள்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்வில் தங்களுக்கான இடத்தை பெற வேண்டும் என்ற உத்வேகத்தையும் தங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.
 
எதிர்காலத்துக்காக தயார் ஆவது : இந்த கால கட்டத்தில் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெற்றோராக இருந்தாலும், அப்பா மட்டும் சம்பாதிக்கும் இல்லங்களில், மகள்கள் தந்தையை அதிகம் கவனிக்கிறார்கள். தந்தையால் குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது. இதனை கண்கூடாக உணரும் மகள்களுக்கு தங்களுடைய எதிர்காலத்திற்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனை இளம் வயதிலேயே தோன்றிவிடும்.
 
குடும்பத்தின் முக்கியத்துவம் : ஒரு நபர் எவ்வளவு பிசியாக இருந்தாலும், அவர் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை தந்தையிடம் இருந்து தான் பிள்ளைகள் கற்றுக்கொள்ளும்.
 
தைரியமாக இருப்பது : ஒரு அப்பாவாக, எந்த சூழலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நபர் தான் மகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பார். எந்த சூழலிலும் தைரியத்தை கைவிடக் கூடாது என்று மகள்களுக்கு அப்பாக்கள் காண்பிக்க வேண்டும்.
 
வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் : படித்தால் மட்டும் போதுமா, வீட்டு வேலைகள் மட்டும் செய்தால் போதுமா என்று குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல், எங்கு பேசுவது, எங்கு அமைதியாக இருப்பது, எப்படி முடிவெடுப்பது, என்று வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அப்பாக்கள் தங்கள் செயல்கள் மூலம் கற்றுத் தருகிறார்கள்.
 
உணர்வுகளைக் கையாளுதல் : ஆண் பெண் இருவருமே உணர்வுகளை வெவ்வேறு விதமாக கையாளுவார்கள். எனவே அப்பா ஒரு குறிப்பிட்ட உணர்வுகளை, உணர்ச்சிபூர்வமான சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பெண்கள் கூர்ந்து கவனிப்பார்கள். தன் அம்மாவிடம் இருப்பதை விட, அப்பாவிடம் உணர்வுகளை கையாளும் விதத்தை பெண்கள் அதிகமாக கவனிக்கின்றனர்.
 
சொந்தக் காலில் நிற்பது : சொந்தக் காலில் நிற்பது என்பது எல்லா பெண்களுக்குமே, பெண்கள் தான் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லாத பொழுது, தன் தந்தையை முன்னுதாரணமாக ஒரு மகள் எடுத்துக்கொள்கிறார்.
 
பின்வாங்காமல் இருப்பது : ஒரு முயற்சி செய்த பின், அதில் முழுவதுமாக ஈடுபடாமல் வெற்றி தோல்வியோ பரவாயில்லை என்ற பின்வாங்காமல் இருப்பதை அப்பாவிடம் இருந்து மகள்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்